ரதி ரகசியம்
Rathi Ragasiyam

அதிவீரராமன் கொக்கோகம் - தம்பதிகளுக்கு மட்டுமே தரப்படும் வாழ்வு நூல்.

ஆண் பெண் உறவு பற்றிய நூல்களைப் படிப்பதோ அது பற்றிய செய்திகளைக் கேட்பதோ தவறானது என்ற நிலைமை மாறி, தம்பதிகள் அனைவரும் இதை அறிந்து கொள்வது இல்லறவாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது என்ற தெளிவு இப்போது இக்கால தம்பதிகளுக்கு பிறந்திருக்கிறது.

இன்பகரமான குடும்ப வாழ்வு தம்பதிகளுக்குள் மலர்வதற்கு இது ஒரு நல்ல வழிகாட்டி நூலாகும்.

மிகப் பழைய காலத்திலிருந்தே ஆண் பெண் தாம்பத்திய உறவு மிகவும் புனிதமான உயர்ந்த கண்ணோட்டத்துடனேயே ஆராயப் பட்டிருக்கின்றது. நமது மூதாதையர் மிகச் சிறந்த நூல்களை வகுத்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று இந்தக் கொக்கோகம் ஆகும்.

இதனைப் பாடிய அதிவீரராமர் பொறுப்பற்ற ஒருவரன்று. தமிழ் மன்னர் பரம்பரையுள் மிகச் சிறந்த புலவராகவும், தூய சிவபக்தராகவும் விளங்கியவர். அவ்வளவு புலமையும் , ஒழுக்கமும் தகுதியும் உடையவர் கொக்கோக நூலைத் தமிழ்ப்படுத்தினார் என்றால்,அது இன்பகரமான குடும்ப வாழ்வு தம்பதிகளுக்குள் மலர்வதற்கும், ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் என்ற அவரது அருள் நோக்கம் ஒன்றினால் மட்டுமே.

இக்காலத்திற்கு ஏற்ற வகையில் , மூலமும் - உரையும்‌, படிப்பதற்கும், கேட்பதற்கும் (AUDIO) , ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ற விளக்கம் மற்றும் படங்கள் (ILLUSTRATIONS) உடன் இந்த ஆன்லைன் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் அனைவரும் படித்து, பயன்பெற (இல்லறவாழ்வை இனிமையாக்கிக்கொள்ள) வாழ்த்துகிறோம்.

பொருளடக்கம்